இளங்குற்றவாளிகளை வினைத்திறனாக புனர்வாழ்வு நடவடிக்கை…

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று பிற்பகல் நீர்கொழும்பு தளுபொதவிலுள்ள இளங்கைதிகள் சீர்திருத்த மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, இளங்குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், அங்குள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடலிலும் அவர் ஈடுபட்டார்.

சிறிய குற்றங்களை புரிந்துள்ள இளங்குற்றவாளிகளை வினைத்திறனாக புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம், அவர்கள் பாரிய குற்றவாளிகளாக மாறுவதனை தவிர்த்து சமூகத்தில் நற்பிரஜைகளாக மாறுவதற்கு இந்த நிலையத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share:

Author: theneeweb