இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மாணவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தல்

10 தமிழக மீனவர்களுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களை விடுதலை செய்யுமாறு, இராமநாதபுரத்தைச் சேர்ந்த அவர்களின் குடும்ப உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 தமிழக மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுள், சாம் டேனியல் என்ற சாதாரணதர வகுப்பு மாணவரும், துரை பாண்டி என்ற பொறியல்துறை மாணவரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு இராமநாதபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவர்களின் குடும்ப உறவினர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தையும், உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டங்களை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb