ஆஸ்திரேலிய அரசுக்கு அசாஞ்சே தந்தை கோரிக்கை

பிரிட்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அசாஞ்சேயை திரும்ப நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு அவரது தந்தை ஜான் ஷிப்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சன்டே ஹெரால்ட் சன் பத்திரிகைக்கு ஜான் ஷிப்டன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சே கைது செய்யப்பட்டபோது, அவரது நிலையை பார்த்து மிகவும் கவலையடைந்தேன். அவரை படிக்கட்டுகள் வழியே போலீஸார் இழுத்து வந்தனர். எனக்கு 74 வயதாகிறது. அவருக்கு 47 வயதுதான் ஆகிறது. ஆனால் அவரைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் நான் நன்றாக இருக்கிறேன். அதேநேரத்தில், அசாஞ்சே தோற்றம் மோசமாக இருந்தது. இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் திருப்தியடையும் வகையில் தீர்வு காண முடியும். செனட்டரும், வெளியுறவுத் துறை மூத்த அதிகாரியும் பேசி, அசாஞ்சேயை ஆஸ்திரேலியா கொண்டு வர வேண்டும் என்றார்.

Share:

Author: theneeweb