முன்னாள் பாராளுமன்ற சந்திரகுமாரின் தந்தை காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான சந்திரகுமாரின் தந்தையும் ஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணத்தின் மேலதிக மாகாண காணி ஆணையாளரும், வவுனியா செட்டிக்குளம் பிரதேச உதவி அரச அதிபருமான கணபதி முருகேசு அவர்கள் கடந்த 14-04-2019 அன்று காலமானார்.

இவரின் இறுதி கிரிகைகள் வவுனியா பூந்தோட்டம் மதீனா வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெற்று பொது மக்கள் அஞ்சலிக்காக நாளை செவ்வாய் கிழமை(16-04-2019) பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சி இரத்தினபுரம் பொது நோக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு தகன கிரிகைக்காக திருநகர் பொது மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

Share:

Author: theneeweb