ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் மீது கொலை மற்றும் சித்திரவதை புரிந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சண்டே டைம்ஸ் ஊடகவியலாளர் மேரி கொல்வின் கொலை செய்யப்பட்டதுக்கு சிரிய அரசாங்கத்துக்கு எதிராக வெற்றிகரமான சிவில் வழக்கைத் தொடர்ந்த அதே வழக்கறிஞர்களால், முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் மீது அமெரிக்க நீதி மன்றத்தில் நீதிக்குப் புறம்பான கொலை மற்றும் சித்திரவதை புரிந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு தனது சகோதரரான மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியை இழக்கும் வரையிலும், மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதி வருடங்களிலும் ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கோட்டபாய ராஜபக்ஸ, இந்த ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சித்திரவதைகள் உட்பட குற்றங்கள், தன்னிச்சையாக காவலில் வைத்தல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் என்பன தொடர்பாக புலனாய்வு செய்யும் ஸ்ரீலங்காவின் சொந்த புலனாய்வு அமைப்புகள் ஆகிய இருபகுதியினராலும், தமிழர்களுடான மோதலின் போதும் அது முடிவடைந்த 2009ம் ஆண்டுவரையும் மேற்கூறிய குற்றங்களைப் புரிந்ததாகக் கருதப்படும் நாட்டின் காவல்துறை மற்றும் இராணுவத்தினரை இவர் நேரடியாக மேற்பார்வை செய்தார் என நம்பப்படுகிறது.

Roy Samathanam

இந்த வழக்கின் சட்டக் குழுவினரின் சார்பாக வேலைசெய்யும் தனிப்பட்ட விசாரணையாளர்கள், ஞ}யிற்றுக்கிழமை இரவு கோட்டபாயா ராஜபக்ஸவை கலிபோர்னிய நகரமான பசடேனாவில் உள்ள வர்த்தகரான ஜோ என்பவரின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்துச் சந்தித்து முறைப்படி அவரிடம் இந்த சிவில் வழக்குகளுக்கான அறிவிப்பைக் கையளித்தார்கள். அதே நேரம் தமிழ் இனத்தைச் சேர்ந்தவரும் தற்போது கனடியக் குடிமகனாகவும் உள்ள றோய்; என்பவரை ஸ்ரீலங்கா பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறையினர், புலிகளுக்கு உதவி செய்தார் என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து மூன்று வருடங்களாகத் தடுப்புக்காவலில் வைத்து சித்திரவதை செய்ததாக ஐநா மனித உரிமைகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அடித்தல், வலி ஏற்படுத்தும் கைவிலங்குகள தரித்தல்; மற்றும் பாதுகாப்பு படையினரின் கட்டாயக் கற்பழிப்பு என்பன உட்பட குற்றஞ்சாட்டப்படும் சித்திரவதைகள் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்டன. “சிறைச்சாலைக்குள்ளேயே பெண்கள்மீது பாலியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது சர்வசாதாரணம்” எனச் றோய் செவ்வாய் அன்று லண்டனில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்துத் தெரிவித்தார்.

“நான் பார்த்த தோற்றங்கள், அங்கிருந்த யுவதிகள் மற்றும் அவர்களைப் பாலியல் ரீதியாக தாக்கியவர்கள், ஆகிய அனைவரது முகங்களும் எனக்கு இன்னும் நினைவில் உள்ளன மற்றும் அங்கு என்ன நடந்தது என்று எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.”

கோட்டபாய மீது குற்றம் சாட்டப்படும் ஒரு இரண்டாவது வழக்கு தனது சொந்த மரணம் பற்றி தீர்க்கதரிசனமாக 2009ம் ஆண்டு வேலைக்குச் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது பத்திரிகையில் ஒரு ஆசிரியத் தலையங்கத்தில் அறிவித்த புகழ்பெற்ற பத்திரிகையாளரான லசந்த விக்கிரமதுங்கவை நீதிக்குப் புறம்பான கொலை செய்யத் “தூண்டியது மற்றும் அங்கீகாரமளித்தது” தொடர்பானது.

69 வயதான கோட்டபாய இந்தக் குற்றங்கள் சாட்டப்படும் நேரத்தில் ஒரு அமெரிக்கப் பிரஜையாக இருந்தார், ஆனால் இந்த வருடப் பிற்பகுதியில் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அவர் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட வேண்டும். “ஆகவே நீண்ட காலமாக அவரைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு இதுவே கடைசி வாய்ப்பு” இவ்வாறு தெரிவித்தார் இந்த சித்திரவதை வழக்கை கொண்டுவரும் குழவைச் சேர்ந்த சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குனரான யஷ்மின் சூக்கா.

இது குறித்து கருத்துக் கேட்பதற்காகா கோட்டபாய தொடர்பு கொள்ளப்பட்டார். அவர் வழக்கை எதிர்கொண்டு தோல்வியடையலாம் அல்லது வழக்கை சந்திப்பதில் தவிர்ப்பதைத் தெரிவு செய்யலாம், இழப்பீடு வழங்குமாறு அவருக்கு உத்தரவிடப்படலாம் அது அவருக்குச் சொந்தமாக அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு சொத்திலிருந்தும் எடுத்துக்கொள்ளப் படலாம்.

சித்திரவதை வழக்குக்கு ஸ்கொட் கில்மோர் தலைமையேற்கிறார், இவர் கடந்த ஜனவரி மாதம், சண்டே டைம்ஸ் இனது யுத்தம் பற்றிய செய்தியாளரான கொல்வினை நீதிக்குப் புறம்பாகக் கொலை செய்ததாக சிரிய அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய வழக்கில் வெற்றி பெற்றிருந்தார். நீதிமன்றம் சிரியாவிற்கு 300மில்லியன் அமெரிக்க டொலர்களை (228 மில்லியன் பிரித்தானியப் பவுண்கள்) தண்டனை சேதமாக வழங்கும்படி உத்தரவிட்டிருந்தது.

திரு. றோய் சமாதனத்தை சித்திரவதை செய்த படையினர்களின் ஒட்டு மொத்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை கோட்டபாய கொண்டிருந்தார், எனவே அந்த நடத்தைக்கான சட்டபூர்வ பொறுப்பை இவர் கொண்டுள்ளார் என்று வாதாடுவதற்கு வழக்கறிஞர்கள் வழி தேடுகிறார்கள்.

“கோட்டபாய பகிரங்கமாக விடுத்துள்ள அறிக்கையில் பல வருடங்களாக பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டை தான் மையப்படுத்தியதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்” என கில்மோர் தெரிவித்தார்.

“இந்தச் சம்பவங்கள் யாவும் பரவலாக அறிவிக்கப் பட்டு, ஐநா வினால் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. ஆகவே பாதுகாப்புச் செயலாளர் என்கிறவகையில் இந்த துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதை அல்லது நடைபெறுவதாகக் குற்றம் சாட்டப்படுவதை அவர் தெளிவாக அறிந்திருந்தார், ஆனால் அதை விசாரணை செய்து குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை அவர் ஒரு போதும் மேற்கொள்ளவில்லை.”

2015ல் உள்நாட்டுப் போரின்போதும் மற்றும் அதற்குப் பின்னரும் நடைபெற்ற மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்து குற்றவாளிகளைத் தண்டிப்பதாக ஸ்ரீலங்கா வாக்குறுதி வழங்கியருந்தது, ஆனால் அந்த நடவடிக்கை உள்நாட்டு நீதிமன்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், நாடு தனது குடிமக்களை கலப்பு அல்லது சர்வதேச நீதி நடவடிக்கைகளின் முன் நிறுத்துவதை எதர்க்கிறது.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
(நன்றி: கார்டியன்)

Share:

Author: theneeweb