அசாஞ்சே கைதுக்கு பிறகு ஈக்வடார் வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல்கள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை தாங்கள் பிரிட்டன் போலீஸாரிடம் ஒப்படைத்த பிறகு, தங்கள் நாட்டு வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக ஈக்வடார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பேட்ரிசியோ ரியல் கூறியதாவது: ஜூலியன் அசாஞ்சேவுக்கு நாங்கள் வழங்கியிருந்த அடைக்கலத்தை விலக்கிக் கொண்டதால் அவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எங்களது வலைதளங்களில் 4 கோடி முறை ஊடுருவல் தாக்குதல் நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஊருவல், பெரும்பாலும் அமெரிக்கா, பிரேசில், ஹாலந்து, ஜெர்மனி, ருமேனியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து நடைபெற்றுள்ளது என்றார் அவர்.

Share:

Author: theneeweb