கிளிநொச்சி, பாரதிபுரம் மயானத்திற்கு அருகில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சம்பவத்தி 05 பேர் கிளிநொச்சி, பாரதிபுரம் மயானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய கிளிநொச்சி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்த 05 மோட்டார் சைக்கிள்களும், 03 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத் தொகையும் பொலிஸ் அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்கள் மேலதிக விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb