மிருனாள் சென் மறைவு: இந்திய சினிமாவின் பேரிழப்பு!

நவீன சினிமாவின் அடையாளமாகக் கருதப்படும் திரைப்பட ஆளுமை மிருனாள் சென் இன்று காலமானார்.

சத்யஜித்ரே, ரித்விக் கடாக் என இந்திய சினிமாவுக்கென தனித்த அடையாளமும், உலக சினிமாவில் இந்திய சினிமாவுக்கான இடத்தையும் பெற்றுக்கொடுத்த பொற்காலத்தில் அவர்களுடன் இந்திய சினிமா பல உயரங்களை எட்டிப்பிடிக்க காரண்மாக இருந்தவர் மிருனாள் சென்.

நிலம் சார்ந்த கதைகளை இயக்குவதாலேயே, மிருனாள் சென்னின் படங்களில் அந்தந்த ஊர்கள் தனித்த இடத்தைப் பிடிக்கும். கொல்கத்தாவிலேயே மிருனாளின் கதைகள் நிகழ்வதால், கொல்கத்தா அவரது ஒவ்வொரு படத்திலும் வரும் பெயரிடப்படாத கேரக்டராகவே இருக்கும். அப்படி, அவர் நேசித்த கொல்கத்தாவிலேயே அவரது உயிர் பிரிந்திருப்பதைக் கூறி தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் மிருனாள் சென்னின் ரசிகர்கள்.

பவானிபூரில் உள்ள அவரது இல்லத்தில், இன்று காலை 10.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக மிருனாள் சென் உயிரிழந்தார்.

Share:

Author: theneeweb