சிறுவர் துஸ்பிரேயோகங்கள் தொடர்பில் 12,093 முறைப்பாடுகள்

நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கு சிறுவர் துஷ்பிரேயோகங்கள் தொடர்பில் கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம்  12,093 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்குரிய செயற்திறன் அறிக்கையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  1,187 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் இரண்டாவதாக குருநாகல் மாவட்டத்திலிருந்து 1,084 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், 2017ஆம் ஆண்டு முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து எவ்வித முறைப்பாடுகளும் நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் கடிதம், தொ​லைபேசி, அநாமதேய அழைப்புகள் மூலம் கிடைத்துள்ளதென்றும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சட்ட நடவடிக்கைகளுக்காக வெவ்வேறு திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb