மாகந்துர மதூஷின் மனு டுபாய் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என்று டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை இலங்கைக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ நாடு கடத்த வேண்டாம் எனக்கோரி டுபாய் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Share:

Author: theneeweb