கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கொழும்பில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன், அமைச்சர் மங்கள சமரவீர இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெறவுள்ளது.

அதில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதுடன், அதற்காக தமது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளையும் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமையானது, அரசாங்கத்தின் கைகள் இதில் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb