போர்த்துக்கல்: பேருந்து விபத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி

போர்த்துக்கல் நாட்டில் புதன்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 29 பேர் பலியாகினர்.

போர்த்துக்கல்  நாட்டிலுள்ள சுற்றுலா தளமான மதீரா தீவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடி, சாலையோரம் இருக்கும் வீட்டின் மேற்கூரையில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 29 பேர் பலியாகினர். அவர்களில் 18 பேர் பெண்கள். 11 பேர் ஆண்கள் ஆவர். இதுதவிர்த்து, மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு போர்த்துக்கல்  நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து சரியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு போர்த்துக்கல்  அரசு உத்தரவிட்டுள்ளது.

Share:

Author: theneeweb