வவுனியா வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்

சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விடேச கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது வெளிநாட்டுச் சிறப்புப் பயிற்சியினை நிறைவு செய்து கடந்த வாரம் நாடு திரும்பியிருந்த வைத்தியர் மு.ஞானரூபன் இவ்வாரம் வவுனியா வைத்தியசாலையில் தமது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

உரிய வைத்திய நிபுணர் இன்மையால் நீண்டகாலமாக வவுனியா மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் கண் சிகிச்சைகளுக்காக தொலைதூரங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, அமைச்சரின் நேரடி உத்தரவிற்கிணங்க மேற்படி நியமனம் மத்திய சுகாதார அமைச்சினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb