முல்லைத்தீவு – விசுவமடு, புத்தடி பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான இளைஞர் பலி

முல்லைத்தீவு – விசுவமடு, புத்தடி பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் தொட்டியடி விசுவமடுவைச் சேர்ந்த 18 வயதுடைய தர்மபாலசிங்கம் தயானந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

24 வயதான கணேசமூர்த்தி கிரிசன் என்பவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசுவமடு – புத்தடி பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் இவர்கள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர்.

குளிக்கச் சென்றிருந்த போது, மரத்தடியில் நின்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்திற்கு இலக்கான மற்றுமொரு இளைஞர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Share:

Author: theneeweb