ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற மகிந்த!

பெருந்தோட்ட தொழிலாளர்கள் கோரிய 1000 ரூபா வேதனத்தை அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கத்தினால் இந்த வேதனத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா – ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சமய வழிப்பாடுகளில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தம்முடைய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரிய வேதனம் வழங்கப்பட்டது.

ஆனால், தற்போதைய அரசாங்கத்தினால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரிய ஆயிரம் ரூபா வேதன உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாமல் உள்ளது.

அரசாங்கத்தால் அதனை செய்ய முடியாவிடின், இந்த அரசாங்கத்தின் இயலுமை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதேநேரம், ஜனாதிபதித் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரையே தமது தரப்பில் களமிறக்குவதாக தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது குழப்ப நிலைமைகள் நிலவுகின்றன.

அது அவர்களுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb