ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேர்தெடுக்க முடியாமல், ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேர்தெடுக்க முடியாது, ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்ரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியினால், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பம் முதல் கூறிவந்தது.

எனினும் தமது கட்சியில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேநேரம், ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் பாரிய நெருக்கடி தோன்றியுள்ளது.

அமைச்சர்களான சஜித் பிரேமதாஷ மற்றும் ரவிக் கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுப்பாடுகள் தெளிவாக தென்படுகின்றன.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி எனவும் எம்.எம் சந்ரசேன குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb