ஜப்பான் அனுப்புவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது

ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்த ஒருவர் கொள்ளுபிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 06 கடவுச்சீட்டுக்கள், போலியாக செய்யப்பட்ட 06 ஜப்பான் விசாக்கள், 02 வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் 02 டெப் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்ததாக சந்தேகநபருக்கு எதிராக குருணாகல் விஷேட குற்ற விசாரணைப் பிரிவில் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரயி வந்துள்ளது.

சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் குருணாகல் விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

Share:

Author: theneeweb