வேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வேன் ஒன்று புடவையகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான போதிலும்  உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

இன்று  காலை 9.00 மணியளவில் பருத்தித்துறையில்’ இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியால் பயணித்த ஹயஸ் வாகனம் திடீர் என அருகில் இருந்த புடவையகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

புடவை நிலையத்தில் ஆட்கள் இருந்த போதிலும் , வீதியால் பலர் பயணித்த போதிலும் யாருக்கும் உயிர் சேதமேதும் ஏற்படவில்லை. அங்கு நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று சேதமடைந்துள்ளது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share:

Author: theneeweb