நாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்!

கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து கொழும்பில் இரு நட்டத்திர ஹோட்டல்களிலும் இன்று காலை இரண்டு குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடியிலும், சினமன் கிரேண்ட் ஹோட்டலிலும் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பங்களினால் இதனால் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் படுகயாமடைந்த பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு அருகிலும் மற்றுமோர் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக இதுவரை ஐந்து இடங்களில் இன்று காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்!

கொழும்பில் இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு இதுவரை 24 பேருடைய சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கொழும்பு, கொச்சிக்கடை, நீர்கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பிலும், மற்றும் கிங்ஸ்பெரி, சினமண்ட்கிரேண்ட், சங்கரில்லா போன்ற நட்டசத்திர ஹோட்டல்களிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் பலர் காயமடைந்த நிலையில் கொழும்பு, தேசிய வைத்தியசாலையிலும், கொழும்பு களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தவற மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பிலும் 25 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி!

நாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி குறித்த குண்டு வெடிப்பு சம்பவமானது கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

இதிலும் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இடம்பெற்ற இந்த 6 குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 160 க்கும் மேற்பட்டோர் படுகயாமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் மீட்புப் படையினரும் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், படுகயாமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளத்தானால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb