பேருந்துகளில் பொதிகளை எடுத்து செல்வது தடை: யாழில் பாதுகாப்பு தீவிரம்

மீண்டும் அறிவிக்கும் வரை தனியார் பேருந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மீண்டும் அறிவிக்கும் வரை பொதிகளை எடுத்து வருவதை தவிர்க்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பயணிகள் எடுத்துவரும் பைகளை சோதனை செய்த பின்னரே பேருந்தினுல் ஏற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் பாதுகாப்பு தீவிரம்

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீதிகளில் ஒலிபெருக்கி வாகனங்களுடன் செல்லும் பொலிஸார் மக்களை தவிர்ந்த புதுமுகம் கொண்ட நபர்களை கண்டாலும், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி திரிபவர்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் கூட்டமாக நிற்க வேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

Share:

Author: theneeweb