தீவிரவாத தாக்குதலென சந்தேகம்’

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் சட்டத்தை கையிலெடுக்க கூடாதென கோரியுள்ள கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இது தீவிரவாத தாக்குதல் முயற்சியென சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு கட்டுப்பிட்டிய தேவாலயங்களில் பதிவான குண்டுவெடிப்பு சம்பவங்களில் சிறுவர்களும் உயிரிழந்துள்ளமை கவலையளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது சோகத்தை தெரிவித்தாகவும் கூறினார்.

அத்தோடு மேற்படி தாக்குதலை மனிதர்கள் என்ற வகையில் ஏற்றுக்கொள்ளவே முடியாதென தெரிவித்த அவர், தேவாலயங்களுக்கு செல்லும் மக்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இலங்கையில் இடம்பெற்று வந்ததெனவும், இது ஒரு தீவிரவாத கூட்டு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மக்கள் குழப்பமடைய கூடாதென வேண்டுகோள் விடுத்துள்ள அவர், சட்டத்தை கையிலெடுக்காமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்புகளிடம் அந்த பொறுப்புகளை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Share:

Author: theneeweb