பாடசாலைகளின் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது

இரண்டாம் தவணைக்காக நாட்டின் சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட திடீர் அசம்பாவித நிலையையடுத்து, சகல பாடசாலைகளுக்கும் நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிவராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

வதந்திகளை நம்ப வேண்டாம் ; சபாநாயகர்

இன்றைய வெடிப்பு சம்பவங்கள் குறித்து சபாநாயகர் கருஜய சூரிய வெளியிட்டுள்ள தனது  விஷேட செய்தியில் பல்வேறு விடயங்களை சுட்டிகாட்டியுள்ளார்.

 

இன்றைய தினம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தினால் மெற்கொள்ளக் கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு இது தொடரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளன.

மற்றும் இந்த தேவாலயங்களை குறிவைத்தும் , பொது மக்கள் அதிகம் நடமாடக் கூடிய முக்கிய இடங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வெடிப்பச் சம்பவம் தொடர்பில் அனைத்து மக்களும் சோகத்தில் உள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து வெளியிடப்படுகின்ற பொய்யான வதந்திகளை நம்பாமல் அனைவரும் அமைதியாக செயற்பட வேண்டும்.

இந்த திட்டமிட்ட சதித்திட்டக்காரர்களையும் அவர்களின் நோக்கம் குறித்தும் அறிந்துக் கொள்வதற்காக அனைவரும் விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக செயற்படுவதுடன், நாட்டில் ஏற்பட்டள்ள சிக்கல் நிலைமை குறித்துஅவதானமாகவும் இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Share:

Author: theneeweb