நாட்டை அமைதியின்மைக்குள் தள்ளிவிடும் சதி முயற்சிகளுக்கு அனுமதிக்க கூடாது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திகுமார்

உயிர்தெழு ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளமை மிகவும் கவலைக்கும், வன்மையான கண்டனத்திற்கும் உரியது.

யுத்தம் நிறைவுக்குகொண்டு வரப்பட்டு நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த போது இச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.மூன்று தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் இந்தக் குண்டுவெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டை மீண்டும் வன்முறைக்குள் தள்ளி அமைதியின்மையை ஏற்படுத்திவிடும் சதி முயற்சிகளுக்கு அனுமதிக்க கூடாது. இலங்கை மக்கள் என்ற வகையில் நாம் அனைவரும் இனம் மதம், மொழி கடந்து இலங்கை பிரஜைகளாக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய சூழல் இதுவாகும்.

அத்தோடு நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுமை ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்விடயத்தில் அரசு மிக விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பதோடு,

இச் சம்வத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதோடு, காயப்பட்டவர்கள் விரைவாக குணமடையவும் பிரார்த்திப்போம் எனத் தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்

Share:

Author: theneeweb