இன்றைய குண்டுவெடிக்கு சம்பங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் – கலாநிதி டானியல் தியாகராஜா பேராயர் தென் இந்திய திருச்சபை

இன்று உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்பெற்றெழுந்ததைக் கொண்டாடும் ஈஸ்டர் தினமாகும். இதனூடாக மானுட வாழ்வின் மரணங்களிலிருந்து மக்களுக்கு எப்பொழுதும் விடுதலை உண்டு என்ற உண்மை அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.

ஆனால், இந்தப் புனிதமான நாளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள், அதிலும் குறிப்பாக மூன்று தேவாலயங்களில், இவை மேற்கொள்ளப்பட்டமை கோழைத்தனமான ஒரு செயலாகும். மூன்று ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 100 பேருக்கு மேற்பட்டோர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறி;ஸ்வர்கள் கொண்டாடிய குருத்தோலைத் திருநாளாகும். இந்த நாளில் சில விசமிகள் அனுராதபுரத்திலுள்ள மெதடிஸ்த தேவாலயத்தைக் குறிவைத்துக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுமிருந்தது.

இவற்றைப் பார்க்கும்போது பன்மைத்தன்மை நிறைந்த சிறீலங்கா தேசத்தில் அந்த சிறப்பு அம்சத்தைக் குலைத்து, மதக் காழ்ப்புணர்ச்சியைத் தோற்றுவித்து அதனூடான எமது அழகிய நாட்டைச் சின்னாபின்னமாக்க சில குழுவினர் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது மதக் காரணங்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதில் இறங்;கியுள்ளனர் என்பது தெரிகின்றது. இந்தக் கொடிய சம்பவத்தையும் அவற்றை மேற்கொண்டவர்களையும ;தென் இந்திய திருச்சபை யாழ்ப்பாண பேராயம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மரணத்திலிருந்து இறைவன் வழங்கும் உயிர்ப்பைத் தியானிக்கவும், அந்த நம்பிக்கையைப் பெறவும் புனித அந்தோனியா ஆலயத்துக்கும், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டியா புனிந செபஸ்டியன் தேவாலயத்துக்கும், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கும் அதிகாலையில் சென்றிருந்த அருமையான மக்கள்மீது இப்படியான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டமை கண்டிக்கப்படத்தக்கதான ஒரு செயலாகும். குற்றவாளிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் கொணரப்படுவது அவசியம். மரணித்தவர்களது பிரியமான ஆத்துமங்களுக்கு இறைவன் இளைப்பாறுதல் தருவாராக. குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share:

Author: theneeweb