நல்லூருக்கும் வவுனியா தேவாலயங் களுக்கும் பாதுகாப்பு:

நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.மரியன்னை பேராலயத்திற்கும் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.

 வவுனியா தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு
நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற  தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய  செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb