மீண்டும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

இன்று (22) இரவு 8 மணி முதல் நாளை (23) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக நேற்று (21) மாலை முதல் இன்று (22) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஷங்கிரி – லா ஹோட்டலுக்கு காலவரையின்றி பூட்டு

ஷங்கிரி - லா ஹோட்டலுக்கு காலவரையின்றி பூட்டு

நேற்று வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற ஷங்கிரி – லா ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் அறிவிக்கும் வரையில் குறித்த ஹோட்டல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஷங்கிரி – லா ஹோட்டலில் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்துகொள்ள +603 2025 4619 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்க முடியும் எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Share:

Author: theneeweb