வேளாங்கண்ணி ஆலயத்தில் பாதுகாப்பு

சென்னை : இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. எனவே, தமிழகத்தில் உள்ள பிரபலமான வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரார்த்தனை கூட்டத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Share:

Author: theneeweb