தற்காப்பு பயிற்சியில் அசத்தும் கிராம பெண்கள்

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு அவர்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சி வழங்குவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு அவர்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சி வழங்குவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நிறைய பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
Chiropraktiker Sprachlos: Einfacher “Hack” Lindert Jahrelange Rückenschmerzen
Max Health Magazine
Controversial Error Gets German Gaming Service Manager Fired
Finance Times
கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள கங்கழா கிராம பஞ்சாயத்தில் வசிக்கும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக தற்காப்பு பயிற்சி பெற்று அசத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கேரள போலீஸ் மூலம் 5 தற்காப்பு கலை பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் எளிய முறையில் பாதுகாப்பு யுக்திகளை கிராம பெண்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
‘‘இந்த பயிற்சி பெறுவதற்கு முன்பு வேலைக்கு செல்வதற்கு பயமாக இருந்தது. சாலையில் பயந்த சுபாவத்துடனேயே நடந்து செல்வேன். இப்போது தைரியமாக நடமாடுகிறேன். எந்த ரூபத்தில் எனக்கு அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’’ என்கிறார், தற்காப்பு பயிற்சி பெற்றிருக்கும் ஜெயஸ்ரீ.
குடும்பஸ்ரீ எனும் பெண்கள் அமைப்பு பெண்களை ஒருங்கிணைத்து பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறது. 10 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆர்வமாக பங்கேற்று பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
‘‘தற்காப்பு கலையை பெண்கள் கற்றுக்கொள்வதற்கு முதலில் சற்று கடினமாக இருக்கும். அதனால் அதில் இருக்கும் நுட்பங்களை பயன்படுத்தி எளிய முறையில் பயிற்சி வழங்கி இருக்கிறோம். ஆசிட் வீச்சு, கடத்தல் முயற்சி, வழிப்பறி உள்பட 41 வகையான சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி செயல்முறை விளக்கங்கள் மூலம் சொல்லி கொடுத்திருக்கிறோம். அவர்களால் எத்தகைய பிரச்சினைகளையும் பதற்றமின்றி கையாள முடியும்’’ என்கிறார், பயிற்சியாளர் பினு.
பயிற்சியில் பங்கேற்ற 60 வயதான அம்மினி ஜேம்ஸ், ‘‘ஆரம்பத்தில் பயிற்சி பெற்றபோது கை, கால்களில் வலி ஏற்பட்டது. காயத்தாலும் அவதிப்பட்டேன். மற்றவர்கள் பயிற்சி பெறுவதை பார்த்து விரும்பி கற்றுக்கொண்டேன். இளம் வயதினருடன் சேர்ந்து பயிற்சிக்கு சென்றதும், பயிற்சி பெற்றதும் உற்சாகம் அளித்தது’’ என்கிறார்.
Share:

Author: theneeweb