இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு? ராய்டர்ஸ் தகவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 310 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

எனினும், இதனை முஸ்லிம் அமைப்பு ஒன்று நிகழ்த்தியிருக்கலாம் என்று இலங்கை அரசு குற்றம்சாட்டி வந்த நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு  பொறுப்பேற்றிருப்பதாக அமக் என்ற செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமக் என்பது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித்தளமாகும்.

Share:

Author: theneeweb