நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புக்களினால் இதுவரையில் 321 பேர் பலியாகியுயுள்ளனர்

நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புக்களினால் இதுவரையில் 321 பேர் பலியாகியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்கள் காரணமாக 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 375 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதல்கள் காரணமாக 38 வெளிநாட்டவர்கள் பலியானதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb