ஸ்ரீலங்காத் தலைவர்கள் நியுசிலாந்தின் தருணத்தை பின்பற்ற வேண்டியது அவசியம்

கோர்டன் வெயிஸ்

அது அப்படியே செல்கிறது. ஸ்ரீலங்காவில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஒரு பயங்கரமான எதிரொலி உள்ளது, மற்றும் அது ஒரு பதிலடி வடிவத்திலானதாகும்.

பதிலடியானது ஒரு கருவி, பெரும்பாலும் ஒரு ஆயுதம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அனுப்பப் படுவது, அது திட்டமிடப்படாத பெருந் தீங்கினை ஏற்படுத்திவிடும். முதலாம் உலக யுத்தத்தின் போது மஸ்ட்ர்ட் காற்று வளைந்து கொடுக்கும் தென்றலாக மாறியது அல்லது சோவியத் விரோத முஜாகிதீன்கள் அமெரிக்கத் தாயகத்தின் மீது தங்கள் பார்வையைத் திருப்பியது இதற்கு ஒரு உதாரணம்.

இப்போது எங்கள் உலகம் காபூலில் இருந்து கிறிஸ்ட்சேர்க்கு அங்கிருந்து கொழும்புக்குமாகப் பதிலடி நடத்துகிறது. இது வரலாற்று விகாரங்கள், மற்றும் இது எங்கள் பதிப்பு, பழக்கமாகிவிட்ட பருவகாலக் காய்ச்சலைப் போல நான் வளர்ந்து வரும் தலைமுறைக்கான வைரஸ். ஞ}யிறன்று பிந்திய காலை உணவின்போது அல்லது தியானம் செய்யும் தருணம் மற்றும் சமூகப் பிரார்த்தனையின்போது மரணமடைவதற்கான ஒரு வாய்ப்பு.

1970 களின் நடுப்பகுதியில் தமிழ் பிரிவினைவாதிகள், பாதிக்கப்பட்ட தேசியவாதிகள் மற்றும் சீற்றமுடைய கிளர்ச்சியாளர்களுடன் லெபானின் பெக்கா பள்ளத்தாக்கில் இணைந்தார்கள். அங்கு அவர்களுக்கு பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் பற்றாஹ் கிளையினால் பயங்கரவாதம் என அழைக்கப்படும் நகர்ப்புற யுத்தத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

அடிப்படை ஆயதங்களைக் கையாளும் பயிற்சியுடன் சேர்ந்து ஊடுருவல் முறைகள் அரசியல் போதனைகளிலும் பயிற்சி வழங்கப்பட்டது, தமிழ் புரட்சியாளர்கள் தங்களைக் குண்டுகளாக மாற்றுவது எப்படி என்று கற்றுக்கொண்டார்கள். 1987க்கும் ஸ்ரீலங்காவில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட 2009க்கும் இடையே தமிழ் புலி கெரில்லாப் போராளிகள் 250க்கும் மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ஸ்ரீலங்காவில் மேற்கொண்டார்கள். இதில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் பெண்கள் ஆவர்.

இது மிகவும் திறமையான தந்திரோபாய ஆயுதம் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக அரசானது அதன் அடிப்படை பங்கீடான குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வன்முறைகளை கணிசமான அளவு கட்டுப்படுத்த தவறுமானால் அரசாங்கத்தில்; குழப்பம் ஆரம்பமாகிறது. இந்த வருடங்கள் சிலவற்றின்போது நான் ஸ்ரீலங்காவில் வசித்திருந்தேன்., மற்றும் குறைந்தபட்சம் சொல்வதானால் அடிக்கடி நிகழும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் அட்டூழியங்கள் நாட்டைச் சீர்குலைத்திருந்தன.

இருந்தும் இந்த விஷயங்களை பரிசோதிப்பவர்கள் உண்மையிலேயே அதிசயமான ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள், தற்கொலைக் குண்டுதாரிகள் இதுவரை நாங்கள் அளவிட முடிந்தளவுக்கு ஒப்பீட்டளவில் பகுத்தறிவுவாதிகளாகவே இருப்பார்கள். பல வருடங்களுக்கு முன்பு செப்ரம்பர் 11ல் நடந்த குண்டுத்தாக்குதலின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் எங்களுக்குச் சொன்னது போல அவர்கள் கோழைகள் இல்லை. மாறாக அவர்களது உளவியல் சுயவிபரம் ஒப்பீட்டளவில் சாதாரணமானவர்களின் எல்லைக்குள் அடங்கியதாகவே இருக்கும்.

மாறாக, தற்கொலை குண்டுதாரியோ அல்லது தனியான ஒரு பயங்கரவாதக் கொலையாளியோ ஒரு மனோதத்துவ காரணிகள் அல்லது திருமணம், தொழில், உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டம் மற்றும் சமூக நெறிகள் போன்றவற்றுக்கு விசுவாசத்தை வழங்கும் புனிதமான மதிப்பீடுகள் மூலம் உந்துதலைப் பெறுவாhகள். பெரும்பாலும் இந்த மதிப்புகள் மனக்குறை அல்லது அநீதி உணர்வு போன்ற முரணானவற்றை வலியுறுத்துவனவாகும். உண்மையில் அவை உண்மை மற்றும் கற்பனை ஆகிய இரண்டினாலும் தோன்றும் துயர உணர்வினால் ஈர்க்கப்படுபவையாகும்.

மனக்குறை பல்வேறு காரணிகளில் இருந்து தோன்றுகிறது, இவை சமூகம் மற்றும் அரசியல் என்பனவற்றில் இருந்து விலகிச் சுற்றிச் சுழலும்; ஆனால் இறுதியில் அவை தனித்தனியாக உணரப்படும். இதில் கல்வி அல்லது நிருவாகம் விலக்கப்படலாம் அல்லது சமீபத்தில் ஐநா ஆராய்ச்சி திட்டத்தினால் கண்டறியப்பட்ட ஆபிரிக்க தீவிரமயமாக்கல் விளக்குவது பற்றியது,
இது பெரும்பாலும் அரச பாதுகாப்பு படைகளுடான கடினமான மோதல் தொடர்பானது. நிச்சயமாக இது அடையாளத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.

290 இறந்த உயிர்கள் மற்றும் அங்கவீனர்களான நூற்றுக் கணக்கானோர் மற்றும் வாழ்நாள் முழவதும் துக்கம் அனுட்டிக்க நேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களுடன் ஈஸ்டர் ஞ}யிறு கடந்து சென்றுவிட்டது, எந்தப் பாவிகள் இந்தக் கொடும் செயலைச் செய்தார்கள் என்பதைச் சொல்ல யாருக்கும் துணிவில்லை. இத்தகைய கொடூரமான விளைவை ஏற்படுத்த புலிகளின் தந்திரத்தை மீண்டும் வேரிட்டவர் யார்? இறந்தவர்களில் பலர் தமிழ் கிறீஸ்தவர்கள். எங்கள் உலகத்தை மீண்டும் பாழடித்தவர் யார்?

அது புலிகளின் புதிய ஒரு தலைமுறையா? சமீப வருடங்களில் தீவிலுள்ள சிறுபான்மை முஸ்லிம்களையும் மற்றும் கிறீஸ்தவர்களையும் தாக்கி வரும் பௌத்த தீவிரவாதிகளாக இருக்கமுடியுமா? அல்லது சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திலிருந்து மிகவும் பரிச்சியமாக தீவிரமயமாக்கப்பட்ட ஸ்ரீலங்கன் இஸ்லாமியர்களா, ஸ்ரீலங்காவில் பல வருடங்களாக இவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் மற்றும் இவர்களில் 32 பேர் இஸ்லாமிய நாட்டு (ஐ.எஸ்) செயற்பாட்டாளர்கள் என அறியப்பட்டுள்ளனர்?

பொதுமக்கள் சீற்றத்தை தடுப்பதற்கும் மற்றும் ஊகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் சமூக ஊடகங்களைத் தடை செய்திருப்பது சரியானதே. ஸ்ரீலங்காவனது அதன் அசாதாரண அழகு மற்றும் பழமை என்பனவற்றுக்கு அப்பால் 1948ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் இன மற்றும் மத மோதல்களின் விளைவாக ஏற்பட்ட சுழற்சியான வன்முறைகளினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அரசியல் அதிகாரத்தின் வெளிப்பாடான
இன வன்முறை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்கு சாட்சியாகும்.

ஸ்ரீலங்கா மற்றும் நியுசிலாந்து தீவுகளில் நடைபெற்ற படுகொலைகள் பல சாத்தியமான பாடங்களைக் கொண்டுள்ளன. ஆனால் முதலாவதாக தனிப்பட்ட செயற்பாட்டாளர்களை கட்டுப்படுத்துவதற்கு நமக்கு திறமை வேண்டும், இவர்கள் தங்கள் செயலின் தன்மையை வெளிப்படையாகப் புரிந்து கொள்ளாததாலும் அதேபோல திட்டங்களை போதுமானளவு கண்காணிக்காததாலும் தவிர்க்கமுடியாத ஒருவித மனக்குறையினை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இரண்டாவது பதிலடி. ஈஸ்டர் ஞ}யிறு மற்றும் கிறிஸ்ட்சேர்ச் படுகொலைகள் எவ்வளவுதான் கொடூரமானதாகவும், தீவிரமானதாகவும் மற்றும் விபரீதமானதாகவும் இருந்தாலும், அவை அடையாள அரசியல், வன்முறை உதாரணங்கள், ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் தலைமுறைகளாக எதிரொலித்து வரும் வரலாற்றுரீதியான மனக்குறைகள் என்பனவற்றின் உலகளாவிய சூழலில் இருந்து வெளிப்படுகின்றன.

கிறிஸ்ட்சேர்ச்சில் நடந்ததைத் தொடர்ந்து பிரதமர் ஆர்டின் கொலையாளியை விரைவாகக் கண்டறிந்ததுடன், நியுசிலாந்தில் உள்ள சிறிய தொகை முஸ்லிம்களின் எந்தவித மனக்குறை அல்லது தவிர்ப்பு உணர்வுகளை தணிக்க முயன்றார் மற்றும் ஆயுதங்களைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றினார்.

ஸ்ரீலங்காத் தலைவர்களின் சாதனை குறைவு. 2009 யுத்தத்தின் பின்னர் உள்நாட்டு அரசியல் நோக்கத்துக்காக அடையாள அரசியல் பல்கிப் பெருக அனுமதிக்கப்பட்டது, இந்த விடயம் தான் கிட்டத்தட்ட இரத்தம்வழியும் மூன்று தசாப்தங்களாக தீவினை கிழித்துப் போட்டது.

கொடூரமான துயரத்தின் மத்தியிலும் இலங்கையின் தலைவர்கள் ஒருவேளை நியுசிலாந்து கடைப்பிடித்ததை iகாயள்வார்களா மற்றும் அது உள்ளடக்கியுள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுக்கு நவீன ஸ்ரீலங்கா தேசத்தில் அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும் என்பதை மீள் உறுதியளிப்பதின் மூலம் பழிவாங்கும் உணர்ச்சியை மட்டுப்படுத்துவார்களா. எல்லாவற்றையும் விட பூமியில் உள்ள எந்த சொர்க்கத்தையும் அழிப்பது மிக எளிது.

(கோடர்ன் வைஸ் ஒரு ஊடகவியலாளரும் மற்றும் ஸ்ரீலங்காவிலிருந்த முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரும் ஆவார். அவர் “ கூடு: ஸ்ரீலங்காவுக்கான யுத்தம் மற்றும் தமிழ் புலிகளின் இறுதி நாட்கள்” என்ற நூலின் ஆசிரியரும் ஆவார்)

தேனீ மொழிபெயர்ப்பு எஸ்.குமார்

Share:

Author: theneeweb