மொஹம்மட் சஹ்ரானை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியிலிருந்த தேசிய தவ் ஹித் ஜமாத் அமைப்பின் முக்கிய புள்ளியான மொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் சஹ்ரான் சாத்தனை நாட்டை விட்டு துரத்தியடி போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தொடர் குண்டுத் தாக்குதல் காரணமாக இதுவரை 359 பேர் உயிரிழந்துடள்ளதுடன், மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடிலுள்ள அநேகமான சிங்கள மற்றும் தமிழ் வர்த்தக நிலையங்களில் முகத்தை முடிய வண்ணம் பரிதா அடைகளை அணிந்து உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb