பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கும் அதனை விரிவுபடுத்துவதற்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை, நியூஸிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியன மேற்கொள்ளவுள்ளன.

நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனடிப்படையில், இந்த விடயம் குறித்து எதிர்வரும் 15ஆம் திகதி பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுடன், சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் (Jacinda Ardern) தெரிவித்துள்ளார்.

இணையத்திலுள்ள பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தகவல்களை நீக்குவதற்கு உலக நாடுகளையும் தொழில்நுட்ப நிறுவனங்களையும் உடன்பட வைப்பதே இதன் நோக்கமாகும்.

கடந்த மார்ச் மாதம் 50 ரே் கொல்லப்பட்ட தேவாலய தாக்குதலின்போது, அது தாக்குதல்தாரியினால் பேஸ்புக் வாயிலாக நேரடியாக ஔிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb