அமைச்சர் சஜித் பிரேமதாச கிளிநொச்சி விஜயம்

இன்று 31-12-2018 கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக நிலைமைகளை கேட்டறிந்துகொண்டதோடு, ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியில் கொண்டுவரப்பட்ட நிவாரணப்பொருட்களை மாவட்டச் செயலகத்திடம் கையளித்துள்ளார்

அத்தோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பன்னங்கண்டி பாடசாலையில் தங்கியுள்ள மக்களையும் சென்று பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள மக்களுக்கு தான் கொண்டு வந்த அரிசி பொதிகளையும் வழங்கி வைத்தார்

 

கிளிநொச்சிக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்றார் அமைச்சர் திகாம்பரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு மலையகத்திலில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் அமைச்சர் திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்

அமைச்சர் திகாம்பரம் இன்று 31-12-2018 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக கிளிநாச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநாச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அமைச்சர் மற்றும் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகியோரை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்றார்.

தொடர்ந்து அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற வெள்ளம் அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடலிலும் கலந்து இவர்கள் கிளிநாச்சி மலையாளபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிறகு மலையகத்திலிருந்து கொண்டுவரப்டடிருந்த இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியாக நிவாரணப்பொருட்களையும் வழங்கி வைத்தனர்

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb