கிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

 கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொலீஸ்,  விசேட அதிரடிப்படையினர், இராணுவம் என பாதுகாப்ப கடமைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, பொது இடங்களில்  சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களாக பொதுச் சந்தை, வர்த்தக நிலையங்கள் என்பன படையினரால் சோதனையிடப்பட்டு வருகின்றதோடு,   பொது மக்களும் அவர்களின்   பயணப் பொதிகளும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.
Share:

Author: theneeweb