வலி கிழக்கு பிரதேச சபையில் தாக்குதல்களைக்கண்டித்துத் தீர்மானம்

அப்பாவிப்பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை இன்று வியாழக்கிழமை 11.30 மணிக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அவை மண்டபத்தில் கூடியது. இவ்வாறு கூடிய போது, தவிசாளரின் தலைமையில் அவையில் சகலரும் எழுந்து நிற்க மண்டப மேடையில் மெழுகுதிரி ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.

இவ் அஞ்சலியில் பிரதேச சபையின் தவிசாளர், நாட்டில் கூடிய அப்பாவிப்பொதுமக்கள் மீது நடந்தேறும் தாக்குதல்களை இக் கௌரவ அவை வண்மையாகக் கண்டிப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாவண்ணம் சட்டம் ஒழுங்கு மற்றும் இதர நடவடிக்கைகள் பலப்படுத்தப்படவேண்டும் எனவும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இத் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அஞ்சலி உரைகள் சபை உறுப்பினர்களால் ஆற்றப்பட்டது. இவ் உரைகள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான அஞ்சலி மற்றும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுத்திநிற்கும் இழப்புக்கள், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதற்கு நாட்டின் சகல துறைகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb