பாதுகாப்புத் துறைச் செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ ராஜிநாமா

கொழும்பு: இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 359 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாகபோலீசார் இதுவரை 58 பேரைக் கைது செய்துள்ளனர். 18 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.  மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது

அத்துடன் மறுநாள் திங்களன்று நடைபெற்ற தொடர் சோதனையில் இலங்கை  சர்வதேச விமான நிலையம், கொழும்பு மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிக்காத குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன

நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாகவும், கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக  பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன செவ்வாயன்று தகவல் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நிரப்பட்ட குண்டுகளுடன் கொழும்புக்குள் லாரி மற்றும் சிறிய  வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஊடுருவியுள்ளதாக  உளவுத்துறை அதேநாள் வெளியிட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

அதையடுத்து ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக தற்கொலைப்படைத் தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் படித்தவர்கள் என்பதும், அவர்களை மூளைச்சலவை செய்து இந்த கொடூர செயலுக்கு பய்னபடுத்தியுள்ளனர் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன செவ்வாயன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சூழலை சரிவராக கையாளாத காரணத்தால் இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ வியாழனன்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

 

Share:

Author: theneeweb