கல்முனையில் மறுஅறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கல்முனை, சாவல்கடே மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் மறுஅறிவித்தல் வரும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கல்முனை – சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை அமுலாகும் வகையில் காவல் துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான நிலைமையை கருத்தில் கொண்டே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் தீவிரவாதிகள் பாதுகாப்பாக மறைந்திருக்கும் வீடு ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த வீட்டினை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் பதிலுக்கு படையினரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்ற வேளையில் தொடர்ச்சியாக மூன்று வெடிப்பு சம்பவங்களும் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டிற்குள் மறைந்திருந்த தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க செய்திருக்ககூடும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb