பணிநிறை பல்கலைக்கழகக் கல்வியாளர் ஒன்றியம்

செய்தி

பணிநிறை பல்கலைக்கழகக் கல்வியாளர் ஒன்றியம்

எமது தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார, அரசியல், சமூக,கல்விசார் மேம்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கி உதவும் நோக்கில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக கல்வியாளர் ஒன்றியம் என்னும் அமைப்பினை உருவாக்கும் நோக்கில் கடந்த 09.03.2019 அன்று ஒன்றுகூடி ஆராய்ந்து, இவ்வமைப்பில் இன்னும் பல்துறைசார் கல்வியாளர்களை ஒன்றுசேர்க்கும் வகையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் 27.03.2019 சனிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் 12.30 வரை இல: 121, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர்கூடத்தில் ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற பல்கலைக்கழக கல்வியாளர் அனைவரையும் வருகை தரும்படி அமைப்பாளர் பேராசிரியர்.இரா சிவசந்திரன் வேண்டுகின்றார்;.

பேராசிரியர்
இரா.சிவசந்திரன்
121, 2ம், குறுக்குத்தெரு,
யாழ்ப்பாணம்.

Share:

Author: theneeweb