உயிர்த்த ஞ}யிறு படுகொலைகளுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார்?

லத்தீப் ஃபாரூக் —-

உயிர்த்த ஞ}யிறு படுகொலைகளுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார்? முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்த போதும் ஏன் இந்தப் படுகொலைகள் தடுக்கப்படவில்லை?

கொடூரமானதும் மனிதாபிமானமற்றதுமான ஏப்ரல் 21ந் திகதிய தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான தாக்குதல்கள் என்று மட்டும் கருதக்கூடாது. மாறாக இந்தத் தாக்குதல் நாட்டின் இதயப்பகுதியில் பன்முக, பல்லினசமூகத்தை மையமாக்கி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கும் மற்றும் கிறீஸ்தவர்களுக்கும் இடையே வன்முறை விரோதம் இருந்ததாகச் சரித்திரமே கிடையாது. எனினும் குறிப்பிட்ட ஒரு காலமாக இந்த இரு சமூகங்களும் சில தீவிரவாத பௌத்தர்களினால் பல சந்தர்ப்பங்களில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இரு தரப்பினரும் வன்முறையினால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆனால் ஒருபோதும் அதற்கு பதிலடி வழங்காதவர்கள். இந்தக் குண்டுதாரிகள் அரச நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள், பௌத்த கோவில்கள் ஏன் இந்து ஆலயங்களைக் கூட இலக்கு வைத்திருந்தால் உண்மையான அல்லது கற்பனையான காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டது என்கிற ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.

மூன்று தசாப்த காலமாக நடந்தேறிய இன முரண்பாடுகளினால் ஏராளமான பாதிப்புக்களை அடைந்தபோதும், நாட்டின் ஐக்கியத்தை காப்பாற்றுவதற்கு உதவிய ஸ்ரீலங்கா முஸ்லிம்கள், பேரழிவான ஏப்ரல் 21 தாக்குதல்களில் சிறிய அளவிலான ஒரு முஸ்லிம் குழு ஈடுபட்டிருப்பதினால் ஆழமான கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

தேசிய தவ்ஹீத் ஜமாத்(என்.ரி.ஜே) க்கு இதில் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுவதும் மற்றும் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளும் ஏற்கனவே இனவாத கைக்கூலிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள முஸ்லிம்கள் மத்தியில் தீவிரமான கவலையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. மார்ச் 2018ல் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட தாக்குதல்களின்போது, எந்தவொரு ஆத்திரமூட்டல் செயற்பாடுகளும் இல்லாமல் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள், கொள்ளையடிக்கப் பட்டார்கள், அவர்களுடைய மசூதிகள் உட்பட அவர்களுடைய செத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு பில்லியன் கணக்கான ரூபாய்கள் நட்டத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியதுடன் அவர்கள் வாழவாதாரங்களையும்; பாழ்படுத்தியது.

இதற்கான குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்ந்து இன்னமும் தண்டிக்கப்படாத போதிலும் இந்தத் தாக்குதல்கள் இவர்கள் மனங்களில் இன்னமும் பசுமையாகவே உள்ளன. இந்தக் கொடூரங்களுக்குத் தலைமை வகித்த ஒருவன், முன்னாள் ஜனாதிபதி பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்தபோது விடுதலை செய்யப்பட்டான். இதுதான் நாட்டின் அரச விவகாரமாக உள்ளது, மேற்கு சார்பான மைத்திர – ரணில் அரசாங்கத்தில் தாங்கள் அலட்சியம் செய்யப்பட்டதாகவும் பாகுபாட்டுக்கு உள்ளாவதாகவும் முஸ்லிம்கள் உணருகிறார்கள்.

மூலோபாய ரீதியில் அமைந்துள்ள இந்த நாட்டினைப் பிரித்து, திசைதிருப்பவும், ஆட்சி செய்யவும் மற்றும் வெளிப்புற புவிசார் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு ஆர்வங்கள் உள்ளுர் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து வேலை செய்துவருகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியப் பெருங்கடலில் ஒரு பனிப்போர் இடம்பெறுவதாலும் மற்றும் இராணுவ மயமாதல் அதிகரிப்பதினாலும், வெளிப்புற சக்திகள் ஸ்ரீலங்காமீது புவிசார் மூலோபாய நலன்களைக் கொண்டுள்ளன, அதனைப் பிரித்து, திசைதிருப்பி, கொள்ளையிட்டு மற்றும் தீவில் இராணுத்தளங்களை அமைக்க விரும்புகின்றன. தமிழர் ஆதிக்கம் நிறைந்த வடக்கு கிழக்குப் பகுதியில் இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள தெற்கில் பௌத்த அமைப்பான பி.பி.எஸ் என்பன யுத்தத்துக்கு பிந்திய காலத்தில் எழுச்சி பெற்றுள்ளன, இவை முஸ்லிம்களையும் மற்றும் கிறீஸ்தவர்களையும் இலக்கு வைத்து வருகின்றன.

தற்கிடையில் குண்டுதாரிகள் ஏன் சினமன் கிரான்ட் முதல் கிங்ஸ்பரி முதலான முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினார்கள் ஆனால் இந்தியருக்குச் சொந்தமான தாஜ்சமுத்திரா ஹோட்டலைத் தாக்கவில்லை. மறுபுறத்தில் உள்ளுர் ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளுர் அதிகாரிகளை விட இந்திய ஊடகங்களுக்கும் மற்றும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் எப்படி இந்த தாக்குதல் பற்றி அதிகம் தெரிந்தது என்கிற கேள்விகளும் எழுப்பப் படுகின்றன? மேலும் இந்திய புலனாய்வு அமைப்பான றோவினால் இந்தப் புலனாய்வுத் தகவல் ஸ்ரீலங்கா அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட இந்தச் சம்பவம் நடப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்பே சந்தேக நபர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்களது சித்தாந்தங்கள் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டுள்ளது, இந்தியர்களின் சந்தேகத்துக்குரிய பாத்திரம் பற்றிய ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதில் மேலும் கவனிக்கத் தக்கது என்னவென்றால் தாக்குதலாளிகள் பெயர்பெற்ற தேவாலயங்களை வெற்றிகரமாக இலக்கு வைத்தபோதிலும் பயங்கரவாதிகளால் இலக்கு வைக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை ஏன் தாக்கவில்லை?

இந்த வெறுக்கத்தக்க குற்றங்கள் தெமட்டகொட அல்லது சரிக்காமுல்லையைச் சேர்ந்த சிறு தொகையான விரும்பத்தகாதவர்களால் நடத்தப்பட்டிருக்க முடியாது, அது நிரூபிப்பது மிகவும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நவீனகரமான குற்றம் மிகவும் கவனத்துடன் திட்டமிடப்பட்டு 20 நிமிடங்களுக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த தாக்குதலுக்கான குற்றத்தை அதிகம் அறியப்படாத ஒரு குழுவான தேசிய தௌகீத் ஜமாத் (என்.ரி.ஜே) மீது சுமத்தியுள்ளார்கள். இந்தக் குழு வெளிநாடுகள் பலவற்றுடன் பலவிதமான இணைப்புகளைக் கொண்டுள்ளது. வெளிநாடுகளுடனான இந்த இணைப்புகள் காரணமாக இந்தத் தாக்குதலின் பின்னால் உண்மையில் யார் உள்ளார்கள் என்பதை தீர்மானிப்பதில் சிக்கல் உள்ளது. ஆகவே என்.ரி.ஜே யின் வெளிநாட்டு தொடர்பு காரணமாக ஒரு வெளிநாட்டு நிறுவனம், பெரும்பாலும் ஒரு வெளிநாட்டு அரசு அல்லது அரச புலனாய்வுத் துறை, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளதாகத் தெரிகிறது மற்றும் இதன் காரணமாக பிடிக்கப்பட்டுள்ள நபர்கள் மிகப் பெரியதும் மற்றும் ஆபத்தானதுமான ஒரு விளையாட்டில் வெறும் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப் பட்டுள்ளார்கள்.

மேலும் அரசாங்கம் ஏன் உடனடியாகச் செயற்பட்டு இந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவில்லை அப்படிச் செயற்பட்டிருந்தால் அப்பாவிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா என்கிற கேள்விகளும் எழுகின்றன. அப்பாவி மக்களின் உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் பொறுப்புள்ள எந்த ஒரு அரசாங்கமும் செய்யவேண்டிய முதல் வேலை அதுவல்லவா.

னாதிபதி சிறிசேன இது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிக்கவுள்ள அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சொல்லியிருப்பது இந்த தாக்குதல் தொடர்பான முன் எச்சரிக்கைகள் ஏன் அலட்சியப் படுத்தப்பட்டன என்பதை உறுதி செய்வதற்கான விசாரணைகளும் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மிகவும் வெட்கக்கேடான அரச விவகாரம் என்னவென்றால், அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ, என்.ரி.ஜே என அழைக்கப்படும் அமைப்பினால் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறவுள்ளதாக காவல்துறை புலனாய்வு அமைப்பு எழுதிய ஒரு உள்ளகக் கடிதம் மற்றும் அறிக்கையின் பிரதியை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுதான்.

“சில புலனாய்வு அதிகாரிகள் இந்தச் சம்பவம் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆகவே அதை செயல்படுத்துவதில் ஒரு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனது தந்தை கேள்விப்பட்டதும் கூட ஒரு புலனாய்வு அதிகாரியிடமிருந்தே. இந்த எச்சரிக்கை ஏன் அலட்சியப்படுத்தப்பட்டது என்பதை கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த இரவு நான் பதுளையில் இருந்தேன்” என அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 11 திகதியிட்ட பொலிஸ் மா அதிபரினால் கையெழுத்திட்ட கடிதம், அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர்கள், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு மற்றும் தூதுவர்களின் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு சேவைகளின் முக்கிய அதிகாரிகளுக்கு விலாசமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

“தாக்குதல் திட்டம் என்று சொல்லப்படும் ஒன்றைப்பற்றிய தகவல்” என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கடிதம் தெரிவிப்பது, அரச புலனாய்வுச் சேவை ஒருவெளிநாட்டுப் புலனாய்வுச் சேவையிடமிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொகமட் சஹ்ரான் என்பவர் பிரபலமான கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் என்பனவற்றை இலக்குவைத்து ஸ்ரீலங்காவில் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தப் போகிறார் என்கிற ஒரு தகவலைப் பெற்றுள்ளது என்று.

அந்தக் கடிதத்தில் பொலிஸ்மா அதிபர் வேண்டியிருப்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தகவலில் கவனம் செலுத்தி வி.ஐ.பி நபர்களுக்கும் மற்றும் அந்த இடங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை பலப்படுத்தவும் என்று.

ரசாங்கப் பேச்சாளரான ராஜித்த சேனரத்ன ஊடகவியலாளர்களிடம் பேசும்போது “நடக்கப்போகும் தாக்குதல்கள் பற்றி வெளிநாட்டு புலனாய்வு முகவர்களிடம் இருந்து பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன” என்று தெரிவித்தார்.

இப்போது உள்ள கேள்வி என்னவென்றால், சேதங்கள் ஏற்பட்டு அப்பாவி உயிர்கள் பலியானதின் பின்னர் விசேட புலனாய்வுக் குழு மற்றும் விசாரணைகளினால் பயன் என்ன என்பதுதான். இத்தகைய பேரிடர் எதிர்பாராத ஒன்றல்ல. கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன்பு கடந்த வருடம் ஒக்ரோபரில் ஒரு கட்டுரையில் இன நல்லிணக்கத்துக்கு சாத்தியமான அச்சுறுததல் ஏற்பட்டுள்ளதாக நான் எதிர்வு கூறியிருந்தேன். இது நான் எதிர்பார்த்ததுதான்.

“ தீவானது இஸ்ராயேலுடன் உறவுகளை வளாத்து வருவது, பாரபட்சம் காட்டப்படும் முஸ்லிம் சமூகத்தின் கவலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது, இஸ்லாத்தின்மீதும் மற்றும் முஸ்லிம்கள் மீதும் நூற்றாண்டுகள் பழமையான இஸ்ராயேலின் கொடூரமான விரோதம் காரணமாக இன நல்லிணக்கத்துக்கு பேரிடரை ஏற்படுத்தலாம் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த அச்சம் உருவானது முஸ்லிம்களுக்கு எதிரான இஸ்ராயேலின் நீண்ட காலப் பகை பற்றிய வரலாறு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற போர்வையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை பூதாகரமாகச் சித்தரிக்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் உலகளாவிய பிரச்சாரத்தில் இஸ்ராயேல் முக்கிய பாத்திரம் வகிப்பது என்பனவற்றாலேயே.
இன்று இஸ்ராயேல் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிஜேபி மற்றும் ஆர்;.எஸ்.எஸ் என்பனவற்றின் கீழ் உள்ள இந்தியா, அங்குள்ள முஸ்லிம்கள் மற்றும் அதேபோல அந்தப் பிராந்தியத்திலுள்ள முஸ்லிம்களுக்கு எதிராக கைகோர்த்து இயங்குவது எல்லோரும் அறிந்ததே.

புத்தியுள்ள மக்களுக்குத் தெரியும் கடந்த மூன்று தசாப்தங்களாக ஐரோப்பாவில் நடைபெறும் தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ராயேலே இருந்தது என்று, அமெரிக்க – ஐரோப்பிய -இஸ்ராயேலிய போர் இயந்திரத்தின் ஒரு பகுதியான மேற்கத்தைய ஊடகங்கள் அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தியது. சில மாதங்களுக்கு பின்புதான் இஸ்ராயேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் வேலை அதுவென நிரூபணமாகியது. இதே வழியில்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் முஸ்லிம் கிராமங்களையும் நகரங்களையும் எரித்தது, முஸ்லிம்களைக் கொன்றது மற்றும் முஸ்லிம் பெண்களை பாலியல் பலாத்தகாரத்துக்கு உட்படுத்தியது போன்ற முஸ்லிம்கள் மீதான ஆயிரக்கணக்கான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாக உள்ளது”.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என்பனவற்றால் முற்றாக பின்துணை வழங்கப்படும் இந்தியா மற்றும் இஸ்ராயேல் என்பன சீனாவுடன் நெருக்கமான உறவினைப் பேணிவரும் இந்த தீவினை குறிப்பாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் மற்றும் சீனாவுக்கும் இடையே உள்ள போட்டியின் காரணமாக ஸ்ரீலங்காவை ஸ்திரமற்தாக ஆக்குவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறுகின்றன. சம்பவம் நடைபெற்ற அந்த நேரத்திலேயே,மேற்கத்தைய ஊடகங்கள் முஸ்லிம்கள்தான் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்று குற்றம் சாட்டும் தங்கள் பாரம்பரிய பங்கை ஆரம்பித்து வைத்தன.

தீவிலுள்ள முஸ்லிம் சமூகம் இந்தப் படுகொலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் முன்னணி முஸ்லிம்களின் கையெழுத்துடன் கூடிய ஒரு அறிக்கையையும் வெளியிட்டது. அந்த அறிக்கை தெரிவிப்பது:

“உயிர்த்த ஞ}யிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த மற்றும் இதயபூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்பாராத வகையில் முற்றிலும் தேவையற்ற, எற்றுக்கொள்ள முடியாத உயிரிழப்புகளையும் மற்றும் உடற் காயங்களையும் எங்கள் சக ஸ்ரீலங்காவாசிகளுக்கும் அவர்களில் பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்தவர்களுக்கும் ஏற்பட்டதுக்கு நாங்கள் எங்கள் ஆழந்த வெறுப்பையும் பெருந் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தச் செயற்பாடு தவறாக வழிநடத்தப்பட்ட சிறிய எண்ணிக்கையிலான குழுவினரான ஸ்ரீலங்கா முஸ்லிம்களினால் நடத்தப்பட்டது என்கிற உண்மை எங்களுக்கு பேரதிர்ச்சியையம் மற்றும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகம் ஸ்ரீலங்கா சமூகத்துடன் ஒருங்கிணைந்துள்ளதுடன் எங்கள் தாய்நாட்டுக்கான பங்களிப்பையும் செய்துள்ளது, முஸ்லிம்கள் ஒருபோதும் தங்கள் நம்பிக்கைகள், கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகத்தின்மீது பிரதிபலிக்கவோ அல்லது பிரதிநித்துவப் படுத்துவதோ இல்லை. நாங்கள் உண்மையான ஸ்ரீலங்காவாசிகளாக எங்களை அடையாளப்படுத்துவதுடன் மற்றும் ஸ்ரீலங்காவாசி என்கிற அடையாளத்தையிட்டு நாம் பெருமை அடைகிறோம்.

இந்த கொடூரமான சம்பவம், எநதவொரு மத மற்றும் இன வன்முறைச் சுழற்சியின்போதும் எங்கள் பன்முக மதிப்பு மற்றும் எங்கள் பொது உறுதியை பாதுகாக்க முயலும் அனைத்து ஸ்ரீலங்காவாசிகளுக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாங்கள் சமாதானம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் உண்மையான இஸ்லாமிய மதிப்பீடுகளோடு எங்கள் முழு சமூகத்தையும் உட்புகுத்துவதற்கு சமமான கடமைப் பட்டுள்ளோம். மனிதாபிமானமற்ற வெறுக்கத்தக்க இந்தப் பயங்கரவாதச் செயலை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

எங்கள் சக ஸ்ரீலங்காவாசிகள் அனைவரிடத்திலும் கட்டுப்பாடுடன் நடப்பதுடன் சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பதைத் தவிர்க்கும்படி நாம் விண்ணப்பித்துக் கொள்கிறோம். நாங்கள் ஒற்றுமையாகச் செயற்படுவோம் இல்லையெனில் நாம் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களாவோம். அனைத்து அரச முகவர்களும் இந்தக் குற்றச் செயல்களைப்பற்றி திறமையாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை திறமையாகவும் மற்றும் விரைவாகவும் நீதியின் முன் நிறுத்தும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb