பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை,மனிதமும் இல்லை : கண்டிஃபோறம் (Kandy Forum) விடுத்துள்ள அறிக்கை

கடந்த உயிர்த்த ஞாயிறுதினத்தில்(21.04.2019) கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய  நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவதேவாலயங்களையும் நட்சத்திரவிடுதிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட, சுமார் 350 அப்பாவிப்பொதுமக்களைக் கொன்று 500 பேரைமோசமான காயங்களுக்கு உட்படுத்திய, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத்தாக்குதல்களை கண்டிஃபோறம் மிகவன்மையாகக் கண்டிக்கிறது.

இப்பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் துரதிஷ்டவசமாக இலங்கைமுஸ்லிம்சமூகத்தைச் சேர்ந்த ஒருசிறிய தீவிரவாதமதக்குழுவினர் என அடையாளம் காணப்பட்டதை அறிந்து நாம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம்.

இஸ்லாத்தில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்பதை நாம் வலியுறுத்திக் கூறவிரும்புகிறோம். இஸ்லாம் சாந்திக்கும் சமாதானத்துக்குமான ஒரு மார்க்கமாகும். யாரேனும் ஒருவர் ஒருமனிதரைக் கொன்றால் அது முழுமனிதர்களையும் கொன்றதற்குச்சமமானது என்றும்,யாரேனும் ஒருவர் ஒரு. மனிதஉயிரைக்காப்பாற்றினால்  அதுமுழுமனிதர்களையும் காப்பாற்றியதற்குச் சமமானது  என்றும் குர்ஆன் அழுத்தமாகக்கூறுகின்றது(5:32). இதுதான்இஸ்லாம். பயங்கரவாதிகளுக்கு மதமும்இல்லை, மனிதசமுதாயத்தில் இடமும் இல்லை. இந்தக்காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதக்குழுவினர் இஸ்லாத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், தங்கள்கருத்தியலிலும் செயற்பாடுகளிலும் அவர்கள்இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என்றும்நாம் வெளிப்படையாகக் கூறவிரும்புகிறோம். இன்றுபத்திரிகைகளில் தெரிவிக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் இவர்கள் ஐஎஸ்ஐஎஸ்என அழைக்கப்படும் ஒரு சர்வதேசப்பயங்கரவாதக்குழுவின்கையாட்களாகச் செயற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.

இப்பயங்கரவாதக்குழு மேலைத்தேய ஏகாதிபத்தியவாதிகளால் மத்தியகிழக்கில் மேற்கொள்ளப்பட்டஅழிவுச்செயற்பாடுகளின் ஒரு உபவிளைவாகும். அவர்களுடைய கருத்தியலும் செயற்பாடுகளும் இஸ்லாத்துக்கு எதிரானவைகளேயாகும்.

இப்பயங்கரவாதப்பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களது இதயம் நிறைந்த இரங்கலையும் அநுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரானஎந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரை இருந்ததில்லை. இந்தநாட்டில் இதுகாலவரை இவ்விருசமூகங்களுக்கும் இடையே எந்தவித மோதல்களோ முரண்பாடுகளோ இருந்ததில்லை. இந்தநிலையில்தான் முஸ்லிம்களுடன் அடையாளப்படுத்தப்படுகின்ற ஒருபயங்கரவாதக்குழுஅ வர்கள்மீது பைத்தியகாரத்தனமாக ஒரு பேரழிவைக்கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. அத்தோடு முழுமுஸ்லிம் சமூகத்தையும்ஒருபேரழிவுச் சூழ்நிலைக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கிறது.

இத்தாக்குதல்களினால்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும்தெரிவிப்பதோடு, அவர்கள்தங்கள்வாழ்வைமீளக்கட்டி எழுப்புவதற்கும்தங்கள் மனவடுவைஆற்றுவதற்கும் சாத்தியமான எல்லாவழிகளிலும் அவர்களுக்கு உதவமுன்வரவேண்டுமென்று முஸ்லிம்சமூகத்தை நாம் வேண்டுகிறோம்.
குற்றவாழிகளுக்கும் அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் எதிராக அவசியமான உறுதியானசட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தையும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளையும் நாம் வேண்டிக்கொள்கிறோம்.

அதேவேளை,கடந்தகாலத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம்தின் கீழ்நடந்ததாகக் கூறப்படும், நிலைமையை இன்னும் மோசப்படுத்தக்கூடிய, ஆதாரமற்ற சந்தேகத்தின்பேரில் மேற்கொள்ளப்படும் காரணமற்றகைதுகளைத் தவிர்த்துக்கொள்வதில் கவனம்செலுத்துமாறும் நாம்அரசாங்கத்தை வேண்டிக்கொள்கிறோம்.
இந்தமண்ணிலிருந்து பயங்கரவாதத்தையும் இனமதவெறுப்பையும் இல்லாதொழிப்பதற்கும், பரஸ்பரபுரிந்துணர்வையும், இனங்களுக்கும் மதங்களுக்குமிடையே நல்லுறவையும்,நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கும், தேசத்தைக் கட்டிஎழுப்புவதற்கும், இலங்கைக்கான பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சகல அரசியல்கட்சிகளுக்கும், பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியமதத்தலைமைப்பீடங்களுக்கும், சிவில்சமூகநிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் நாம் வேண்டுகோள்விடுக்கிறோம்.

கண்டிஃபோறம்உறுப்பினர்கள்
பேராசிரியர்எம். ஏ. நுஃமான்,  பேராசிரியர்எம். ஏ. எம். சித்தீக்
பேராசிரியர்எம். எஸ். எம். அனஸ்,  பேராசிரியர்எம். ஐ .மவ்ஜூத்
கலாநிதி ஏ. எஸ். எம். நௌஃபல்,  கலாநிதிஏ.எல். எம். மஹறுஃப்
கலாநிதி எம். இசற். எம். நஃபீல் ,எம். எம். நியாஸ், ஏ. ஜே. எம். முபாறக்
யு. எம். ஃபாசில், ஜே. எம். நிவாஸ்
(163, எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கமாவத்த, கண்டி)
25.04.2019

Share:

Author: theneeweb