கிளிநொச்சியில் மே தின நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினரால்  நடாத்த திட்டமிடப்பட்டிருந்த மே தின நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ளது என அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே முதலாம் திகதி கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினரால் மே தின நிகழ்வுகள் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.  ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலைகள், மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு சபையின் அறிவிப்பு என்பவற்றிற்கு அமைவாக தங்களது மே தின நிகழ்வுகள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றும் பின்னர் நடாத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என்றும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது
Share:

Author: theneeweb