நாடு முழுவதும் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள்

அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆயுதப்படைகளுக்கு விடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கமைய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர்கள் பொலிஸாரினது ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் நாடு  முழுவதும் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

அதற்கமைய இந்த கூட்டு நடவடிக்கைகளின் ஈடுபட்டுள்ள படையினரால் கடந்த (25) ஆம் வியாழக்கிழமை கொழும்பு கோட்டை, உலக வர்த்தக மையம் மற்றும் இலங்கை வங்கி, நெலும் பொகுண தியேட்டர் மற்றும் வியாபார இடங்களில் தீவிர தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அதேபோல், மட்டக்குளி மற்றும் புறநகர் பகுதிகள், கடுவப்பிட்டிய, பூகொட, புத்தளம், கல்லடி மற்றும் பல பிரதேசங்களில் படையினர் முழுமையான பாதுகாப்பை வழங்கியுள்ளனர். மேலும், சட்டமும், ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நிமித்தம் புத்தளம், பொதுப் பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களைச் சுற்றி உள்ள பிரதேசங்களில் படையினர் பாதுகாப்பு நடவடிக்ககைளில் ஈடுபடுத்தப்படடுள்ளன.

 

மேலும், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது படையகத்தின் 141ஆவது மற்றும் 143 ஆவது படைப் பிரிவுகளில் சேவையில் இருக்கும் 15 இராணுவ அதிகாரிகளும் 200 க்கும் அதிகமான படையினர் அந்த தேடுதல் நடவடிக்கையின் போது 3 சந்தேக நபர்களை கைது செய்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு மேலதிக விசாரணைகளுக்கு ஒப்படைக்கப்பட்டள்ளனர்.

இதேபோன்று 583 ஆவது படைப்பிரிவின் படையினர் பாணந்துரை கெசல்வத்தை பிரதேசத்தில் கடந்த (25) ஆம் வியாழக்கிழமை சோதனைகள் நடத்தியதில் சந்தேகத்தின் பேரில் 41 வீடுகள் பாதுகாப்பு பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளன.

 

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களின் பனிப்புரைக்கமைய மேற்கு இராணுவ படையினர்களால் கடந்த 48 மணி நேரங்களில் வாகனங்கள், வீடுகள், பொது இடங்கள், கட்டடங்கள், மற்றும் சாலைத் தடுப்புகள் ஆகிய இடங்களில் ரோந்து நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளன.

 

அதன்படி இலங்கை இராணுவ ஊடக பேச்சாளர் அவர்களின் கருத்துப்படி, கொழும்பிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் பயங்கரவாதிகள், அவர்களது உறவினர், ஆதரவாளர்கள் மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை தேடும் பணிகளுக்காக சுமார் 7000 க்கும் அதிகமான இராணுவப் படைவீரர்கள் அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் (25) ஆம் திகதி வியாழக்கிழமை தேடுதலின் பேரில் 60 க்கும் அதிகமான சந்தேக நபர்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் தற்போது பொலிஸ் விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டள்ளன.

மேலும் கிழக்கு மாகணத்தில் ரிதிதென்ன, வாழச்சேனை, காத்தான்குடி மற்றும் திம்புலாகல போன்ற பிரதேசங்களில் (25) ஆம் திகதி வியாழக்கிழமை காலை இராணுவ விசேட சிறப்பு படையணி கடற்படை விமானப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தேடல் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தேடுதலின் போது சந்தேச நபர்கள் கைது செய்பட்டள்ளன. இதேபோல் கிழக்கு மாகாணத்தின் பூனானி பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

கிழக்கு பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகரவின் மதத் தலைவர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுடன் 24 மணி நேரத்திற்குள் பல கலந்துரையாடல்களும் மேற் கொள்ளப்பட்டன.

அதே நேரத்தில்(26) ஆம் திகதி வெள்ளிக்கிழமை முஸ்லிம் பள்ளிகளின் பிரார்த்தனை ஆரம்பிக்கப்பட்டபோது இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டனர்.

 

இதற்கிடையில், யாழ்ப்பாணம், வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையில் இருக்கும் படையினரால் நாடுபுராகவும் சந்தேகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கால் ரோந்துகள், சாலை தடைகள், சந்தேகத்திற்குரிய வாகனம் சோதனைகளின்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் (25) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் பாதுகாப்புப் படை தலைமையகத்தினரால் பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர்.

Share:

Author: theneeweb