மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றில் இருந்து கத்தி மற்றும் வாள்கள் மீட்பு

மஸ்கெலியா பள்ளிவாசல் ஒன்றில் இருந்து 47  கத்தி மற்றும் வாள்கள்உடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார்தெரிவித்தனர்.

மஸ்கெலியா நகரில் பொலிஸாரும் இரானுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது குறித்த பள்ளிவாசலில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பள்ளிவாசலில் உள்ள களஞ்சியசாலையிலயே குறித்த வாள்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த வாள்கள் பள்ளியில் வைக்கபட்டது என பொலிஸார் குறித்த சந்தேகநபரிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த வாள்கள்பள்ளிவாசலுக்கு எவ்வாறு வந்தது என தெரியாது என சந்தேக நபர் மஸ்கெலியா பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுப்பு காவலில் தடுத்து வைத்து மஸ்கெலியா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb