கிளிநொச்சி தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புடன் ஞாயிறு வழிபாடுகள், கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை

கிளிநொச்சியில் உள்ள தேவாலயங்களில் இன்று பலத்து பாதுகாப்புக்களுடன் ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. பல  கிராமங்களும் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைளும் இடம்பெற்றன.
வழிபாடுகள் இடம்பெற்ற தேவாலயங்களில் இராணுவம், பொலீஸ் பாதுகாப்புகளுடன் தேவாலயங்களுக்கு செல்லும் மக்கள் கடுமையான உடற் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, ஆலய வாளகத்திற்கு எந்த வாகனங்களும்  அனுமதிக்கப்படவில்லை.
மேலும் பல  தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இடம்பெறவில்லை, ஆராதனைகள் இடம்பெற்ற ஆலயங்களில் வழமையை போன்று மக்கள் கலந்துகொள்ளவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கிளிநொச்சி  திரேசம்பாள்  ஆலயத்திற்கு இன்று காலை கிளி நொச்சி படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய விஜயம் மேற்கொண்டு பொறுப்பு பங்குத்தந்தையுடன் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
இதனை தவிர இன்று(28) அதிகாலை முதல் கிளிநொச்சி  நகர் பரந்தன் உள்ளிட்ட பல பகுதிகள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு வீடுவீடாக சென்று தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன
Share:

Author: theneeweb