குண்டுத்தாக்கதல்களில் இறந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி

உயிரித்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று(28) இடம்பெற்றது.

கடந்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்திற்கு இன்று மெழுகுதிரி ஏற்ப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அகவனணக்கமும் இடம்பெற்றது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அவ்வமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb