தொடர் குண்டுத் தாக்குதல்கள்: தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் இன்று (28ஆம் திகதி) அதிகாலை நாவலப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் இவுஹயீம் சாதிக் அப்துல்லா மற்றும் மொஹமட் இவுஹயீம் ஷாஹித் அப்துல்லா ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டுத் தாக்குதல்களையடுத்து, சந்தேகநபர்களின் பெயர்கள் மற்றும் நிழற்படங்களை பொலிஸார் வௌியிட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb