பரந்தன் பகுதியில் இனம் தெரியாதவர்களால் வீசப்பட்டுள்ள குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.

பரந்தன் பகுதியில் இனம் தெரியாதவர்களால் வீசப்பட்டுள்ள  குண்டு  வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பரந்தன் பகுதியின் நான்காம் வீதியில்  காணப்பட்ட குண்டு ஒன்று இராணுவத்தினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பரந்தன் சிவபுரம் பகுதியில்  வீதியில் வீசப்பட்டிருந்த ரவைகளும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களை தொடர்ந்து  பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 இதன் காரணமாக தங்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த குண்டு மற்றும் ரவைகளை இனம் தெரியாத நபர்கள்  வீதியில் வீசி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இவ்வாறு  காணப்பட்ட குண்டு படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதோடு, ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
Share:

Author: theneeweb