கிளிநொச்சி தர்மபுரம் உழவனூர் கிராமத்தில் முஸ்லிம் ஒருவரின் வீட்டில் இராணுவ சீருடை மீட்பு

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உழவனூர் பகுதியில் பொலிசாரும் இரானுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இரானுவச் சீருடை மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப் பட்டுள்ளன.
குறித்த வீட்டுரிமையாளர் முஸ்லிம்  என்பதோடு, அவரது மனைவி குறித்த கிராமத்தைச் சேர்ந்த தமிழ் பெண்னாவார்
பொலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று(28-04-2019) பகல் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது வீட்டில் இருந்து  இரானுவச் சீருடையை ஒத்த ஆடைகள் மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப் பட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரியும் முஸ்லீம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்கள் தருமபுரம் பொலிஸ்நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
Share:

Author: theneeweb