50 விகாரைகளுக்கு தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் வந்த ஞானசார தேரர் வௌிப்படுத்திய தகவல்!!
50 விகாரைகளுக்கு  தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால் சிறைச்சாலைக்கு வருமாறு அவர் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேபோல் , நாட்டின் தற்போதைய அவசர நிலை வழமைக்கு திரும்பும் வரை விசாக பூரணை மற்றும் பொசன் பூரணை நிகழ்வுகளை  தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறு ‘யதார்த்தம் அமைப்பு’ வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் கிரிஇப்பன்ஆரே விஜித தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவற்துறை தலைமையகம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக மனுக்களை கையளித்துள்ளது.

அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவிகளிலிருந்து நீக்கி குண்டு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் ஜனாதிபதியை கோரியுள்ளது.

இது தொடர்பில் அந்த ஒன்றியம் ஜனாதிபதி செயலகத்தில் மனுவொன்றை கையளித்துள்ளது.

Share:

Author: theneeweb